பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதேபோன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
இந்நிலையில் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. இந்த போட்டியில் சுமார் 610 காளைகளும், 315 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் 61 பேர் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து 17 மாடுகளைப் பிடித்த பூபாலன் என்பவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 14 காளைகளை அடக்கி 2-வது இடம்பிடித்த ரஞ்சித் என்பவருக்கு தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது