திரிபுரா சட்டப்பேரவை தோ்தலில் 20 பெண்கள் உள்பட மொத்தம் 259 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் 3,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு,  1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு தயாராக வைக்கப்படுகின்றன.