விஜயின் தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமூக நீதிப் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருகிறது. மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பிக்க நினைக்கிறது.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். பரந்தூரில் உள்ள 13 நீர்நிலைகளை அழிப்பது சென்னையில் நிரந்தர வெள்ள காடாக்கும்.
மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு என பொதுமக்கள் மீது மேலும் மேலும் வரி சுமையை மட்டும் அதிகமாக விதிக்கிறது திமுக அரசு.
கள்ளச்சாராய் விற்பனை, போதை பொருட்களின் புழக்கம் அதிகரிப்பு போன்ற நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாததால் அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு.
மகளிர் உரிமைத்தொகை, பரிசுத் தொகை என்று ஒருபுறம் அறிவித்துவிட்டு மறுபுறம் மதுக்கடைகள் மூலம் வருவாய் பெருக்கி வருவது ஏற்புடையதல்ல. மது கடைகளை கால நிர்ணயம் செய்து மூட வேண்டும்.
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்திற்கும் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் தகை சால் தமிழர் விருது வழங்கும் தமிழ்நாடு அரசை வரவேற்று தாமாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திமுக தலையில் இடியை இறக்கிய விஜய்… தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…!!
Related Posts
“தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி”… அந்த திறமை இபிஎஸ்-க்கு மட்டும்தான் இருக்கு… ஓபிஎஸ்-க்கு செல்லூர் ராஜு பதிலடி..!!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8வது ஆண்டு நினைவு நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் நினைவேந்தல் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர்…
Read moreபுதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு கூட 6 மாசத்துல… ஆனா 50 வருஷமா நீங்க எனக்கு மட்டும்தான்… உங்க கால்ல விழுந்து நான்… அமைச்சர் உருக்கம்..!!
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன். இவர் சாத்தூர் கரிசல்பட்டி பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 50 வருஷமா நீங்க எனக்கு மட்டும்தான் ஓட்டு போடுறீங்க. புதுசா கல்யாணம்…
Read more