ஓடி ஓடி வேலை செய்யும் பணத்தை வயதான காலத்தில் பயன்படும் விதமாக பலரும் சேமிப்பு திட்டங்களை பணத்தை சேமித்துவருகிறார்கள் . பணத்தை சேமிக்க ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. அந்தவகையில் எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தில் பல நன்மைகள் உள்ளன. இந்தத் திட்டத்தில் சேர்ந்தால் ஒரு நாளைக்கு ரூ.200 செலுத்த வேண்டும். அதாவது மாதம் ரூ.6 ஆயிரம், ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம்.

இந்தத் திட்டத்தில் 20 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, போனஸுடன் ரூ.28 லட்சத்தைப் பெறுவீர்கள். 12 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1.5 லட்சம் மற்றும் அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. நீங்கள் முதலீடு செய்த காலத்துடன் அதன் ரிஸ்க் கவரும் அதிகரிக்கிறது. அதனால் ரிஸ்க் கவர் மற்றும் இன்சூரன்ஸ் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.