
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியிடையே நேரடி போட்டி உருவாகியுள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடவில்லை.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது அதிமுக கட்சியின் பிரமுகர் செந்தில் முருகன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் சுயேச்சை வேட்பாளராக தற்போது போட்டியிடுகிறார். இவர் கடந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் அதிமுகவில் இணைந்தார். மேலும் அதிமுக கட்சியின் பிரமுகர் ஒருவர் சுயேட்சையாக கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது கவனத்தை ஈர்த்துள்ளது.