மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் கூர்மையான சிந்தனை மற்றும் மனிதநேயம் குறித்துப் பரவலாகப் பேசப்படும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிகாரம் எங்கு, எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாகக் கூறப்படுகிறது.
தேனாம்பக்கம் சிக்னல் அருகில் சிறிய அளவில் வெற்றிலை பாக்கு கடை நடத்தி வந்த முருகேசன் என்பவர், நடைபாதையில் கடை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி சிலரால் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். குடும்பத்தின் வறுமை மற்றும் வேறு வழியின்றி அவர் எம்.ஜி.ஆரின் உதவியை நாடிச் சென்றுள்ளார். உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிடாமல், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தனது பயணத்தின்போது தொடர்ந்து மூன்று நாட்களாக அந்தச் சிக்னல் பகுதியைக் கவனித்துள்ளார். அந்தக்டையால் பொதுமக்களுக்கோ அல்லது போக்குவரத்துக்கோ எந்தவித இடையூறும் இல்லை என்பதை அவர் நேரடியாக உணர்ந்துள்ளார். ஒரு நாள் தனது காரை சிக்னலுக்கு அருகிலேயே நிறுத்தச் சொல்லிவிட்டு, திடீரென அந்தச் சிறிய கடைக்கு நேரில் சென்று முருகேசனிடம் நலம் விசாரித்துள்ளார். நீண்டகால நண்பரைப் போல அவர் பேசிய விதம் அங்கிருந்த அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.
முதலமைச்சரே நேரடியாகக் கடைக்கு வந்து நலம் விசாரித்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால், முருகேசனுக்குத் தொல்லை கொடுத்து வந்த அதிகாரிகளும் எதிர்ப்பாளர்களும் தாமாகவே விலகிக் கொண்டனர். எந்தவித அதிகார துஷ்பிரயோகமும் இன்றி, தனது புத்திசாலித்தனத்தால் ஒரு எளிய மனிதனின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றியுள்ளார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, கோட்டைக்கு கிளம்ப ஆயுத்தமாகிறார். அப்பொழுது புரட்சித்தலைவருக்கு அறிமுகமான ஒருவர் தன்னுடன் முருகேசன் (பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவரையும் அழைத்துகொண்டு புரட்சித்தலைவரை காண வருகிறார். அவர்களை பார்த்த புரட்சித்தலைவர்,… pic.twitter.com/AG5QYlmlsO
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) August 19, 2026
“>
அரசியல் அதிகாரத்தை மக்களுக்கான நல்வாழ்வுக்கும், எளியவர்களின் பாதுகாப்பிற்கும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு எம்.ஜி.ஆர் அவர்களின் இந்த அணுகுமுறை இன்றும் உதாரணமாகத் திகழ்கிறது.
