அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு மொபைல் போன்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள், சாலைகள், கடைகள் என பல வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் பூமி மூச்சு விடுவதைப் போன்ற ஒரு வீடியோ வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக சாலை ஓரத்தில் போடப்பட்ட நடைமேடை உள்ளே சென்று வெளியே வருகிறது. அது பார்ப்பதற்கு பூமி மூச்சு விடுவது போல இருக்கிறது. அந்த சாலையை வழியாக சென்ற ஒருவர் காருக்குள்ள இருந்து அதை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.