தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். தற்போது தேர்தலுக்கு அந்த கட்சி தயாராகி வரும் நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி மொத்தம் 117 மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில் தற்போது வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய படிவம் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த படிவத்தில் தேர்வு செய்யப்படும் நிர்வாகிகளின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இழுபறி உள்ள தொகுதிகளில் தேர்தல் மூலமாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மற்ற இடங்களில் ஒருமனதாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.