அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித் தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இதுகுறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் சீனு ராமசாமி சமூகவலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, கல்விக்கு ஊக்க கண் திறக்கும் நண்பா, இளைய தளபதி விஜய் உங்களை வாழ்த்துகிறேன். தங்களது நடிப்பில் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்தது போன்று தமிழ் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.