சில ஆண்டுகளுக்கு முன் அவியல் எனும் திரைப்படத்தின் வாயிலாக இளம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த படத்திற்கு பின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்கள் இயக்கி வருகிறார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். விஜய் மற்றும் லோகேஷ் 2-வது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடந்தது, பின் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 3டி வீடியோவை வெளியிட்டு உள்ளார். லியோ திரைப்படத்தின் புரோமோ காட்சியை மையமாக கொண்டு இந்த 3டி வீடியோவை உருவாக்கியிருக்கிறார் கிராபிக் டிசைனரான மேடி மாதவன். தளபதியை தத்ரூபமாக 3டி அனிமேஷனில் உருவாக்கி காட்சிகளை சினிமா காட்சிகளுக்கு ஈடாக தயாரித்து உள்ளார். இந்த வீடியோவை மேடி மாதவன் என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா, இது உங்களுக்காக” என பகிர்ந்துள்ளார்.