தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த மே எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய நாளை வரை அவகாசம் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் செய்து அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளைக்குள் ஒப்படைக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு சான்றிதழில் திருத்தம் செய்யப்படாது என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.