நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதனை நிரப்பாமல் காலம் தாழ்த்துவது ஏன்? என திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த நிலையில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. மேலும் தற்காலிக மருத்துவர், தற்காலிக செவிலியர் என அரசு ஊழியர்களை தற்காலிகமாக்குவது தான் திராவிட மாடலா எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.