ஆந்திர பிரதேஷ் மாநிலம் அன்னமய்யா பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் உடல் ஊனமுற்றவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கவிதா ஏஜென்சி ஒன்றின் மூலமாக குவைத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற இடத்தில் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து மிகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
உணவு கொடுக்காமல் அடித்து துன்புறுத்துவதாக கூறி ஆந்திர பிரதேஷ் அமைச்சர் பிரசாத் ரெட்டிக்கு என்னை காப்பாற்றுங்கள் என்று காணொளி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராம் பிரசாத் ரெட்டி கவிதா பாதுகாப்பாக இந்தியாவிற்கு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.