தம்பி, நான் இங்கு இருக்கிற வரை நான் தான் கட்சியின் தலைவன், நான்தான் லீட் எடுத்து போவேன், என் கட்சியை ஒழிக்கிறேன் என்று பேசாதே, நான் இருக்கிற வரை என் லட்சியம் இருக்கும், என் லட்சியம் இருக்கிற வரை என் கட்சி இருக்கும் என்று அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் வீரனாக இருந்தால் என்னுடைய கருத்தோடு மோது, தம்பி அண்ணாமலை என்னோடு விவாதத்திற்கு வா, பாஜக தமிழ் நாட்டிற்கு எதற்கு? ஒரே ஒரு காரணம் சொல்லு, நான் கட்சியை விட்டுப் போய் விடுகிறேன், என் கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.