பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த நிலையில், அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக அண்ணா பல்கலை. அறிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் பொன்முடி விளக்கமளித்தார்.
அதில், “தமிழக அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது. எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதைவிட தாய் மொழியில் படிக்க வேண்டும் என்பதே முக்கியம்” என அறிவித்தார்.