தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நேற்று ஆளுநர் ரவியின் உரையோடு தொடங்கியது. அதில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு நிலவியது நிலையில் ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அவர் ஆளுநர் அரசின் கொள்கைக்கு மாறாக தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தமான விஷயம். அதோடு அச்சடிக்கப்பட்ட உரையை படிக்காத ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார். அதன்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆளுநர் உடனடியாக அவையை புறக்கணித்துவிட்டு சென்றார்.

இதனைத்தொடர்ந்து பாஜகவினர் ஆளுநருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னதாக #Article356 என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி இருந்தது. Article356 ஐ பின்பற்றி தான் மாநில அரசுகளை மத்திய அரசு கலைக்கும் என்பதை வலியுறுத்தி அந்த ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்து வந்த நிலையில் நேற்று வெளியான விஜய் படம் வாரிசின் நடிகர் விஜய் 5 நிமிடத்தில் ஆட்சி மாறும் பேசியிருப்பார்.

தற்போது இந்த வார்த்தையை பயன்படுத்தி  ட்விட்டரில் #5_நிமிடத்தில்ஆட்சியேமாறும் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. பாஜகவினரும் வலதுசாரி ஆதரவாளர்களும் இந்த ஹேஷ்டேகை பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சட்டசபையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்டாலின் அரசை கலைக்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.