விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை பகுதி அமைந்துள்ளது. இங்கு திரைப்படப் புகழ் தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் துணை எம்.பி கனிமொழி கலந்து கொண்டார். அதன் பிறகு எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி என்பது திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தான்.

அதிமுக தற்போது பல அங்கமாக பிரிந்துள்ள நிலையில் அதில் பலர் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். அதிமுக பிரிந்து இருந்தாலும் சேர்ந்து இருந்தாலும் இடை தேர்தலில் வெற்றி என்பது காங்கிரசுக்கு தான். அதன் பிறகு திமுக தேர்தல் வாக்குறுதியாக மதுவிலக்கு திட்டத்தை கொண்டு வருவோம் என்று அறிவிக்கவில்லை. மது கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றுதான் திமுக வாக்குறுதியாக கொடுத்தது என்று கூறினார்.