வயதானவர்கள் தமிழக ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை வாங்குவதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களில் யாரேனும் ஒருவர் (அ) வேறு நபர்களை அனுப்பி வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என உணவு வழங்கல்துறை தெரிவித்து உள்ளது. இவ்வசதியை பெற விரும்புபவர்கள் www.tnpds.gov.in எனும் இனையதள பக்கத்திலிருந்து உணவு வழங்கல் துறையின் அங்கீகார சான்று விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை முறையாக பூர்த்தி செய்து ரேஷன் கடை ஊழியரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

அதோடு இந்த படிவத்தை கடை ஊழியர்களிடம் இருந்தும் பெறலாம். இந்த அங்கீகார சான்று படிவத்தை ரேஷன் கடை ஊழியர்கள் தருவதில்லை என சமீபத்தில் புகார்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து படிவம் எளிதில் கிடைக்க வழிவகை செய்யுமாறு அரசு உத்தரவிட்டது. அதன்பின் அங்கீகார சான்று படிவம் அனைத்து ரேஷன் கடைகளிலும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று உணவு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.