தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் நடிகர் விஜய் அடுத்த அதிரடியாக இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக மது கடைகளை மூட வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.
அதாவது ஒருபுறம் மகளிர் உரிமைத்தொகை மற்றும் பரிசு என அறிவித்துவிட்டு மறுபுறம் டாஸ்மாக் கடைகள் மூலமாக அரசாங்கம் வருவாயை பெருக்கி வருவதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பிறகு மது கடைகளை கால நிர்ணயம் செய்து மூட வேண்டும் என்றும் டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக கூடுதல் வருவாய் வரும் பிற திட்டங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டதாகவும் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாகவும் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.