தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வின் 3வது தவணையாக 4,825 கோடியை விடுவித்துள்ளதாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மாநிலங்களின் மூலதனச் செலவுகளுக்காக இயல்பான மாதாந்திர நிதிப்பகிர்வாக மத்திய வரிகள் & தீர்வைகளில் இருந்து 1,18,280 கோடியை மத்திய அரசு நேற்று  விடுவித்துள்ளது.

தவணை நிலுவையோடு கூடுதலாக ஒரு தவணை விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதாவது வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூ.59,140 கோடி மட்டுமே விடுவிக்கப்படும் நிலையில் முன்கூட்டியே கூடுதல் தவணையையும் விடுவித்தது மத்திய அரசு.