கடந்த பிப்,.19 ஆம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2 மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்தது. இம்மோதலை அடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(ஜேஎன்யு) மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்து உள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ஏபிவிபி மற்றும் இடதுசாரிகள் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜேஎன்யுவில் தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மற்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகிய தலைவர்களின் உருவப் படங்களை சேதப்படுத்தியது கண்டனத்திற்குரியது ஆகும். ஆகவே பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.