தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், முழு நீள கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 9 ஆம் தேதியன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் சிலர் வாங்காததாலும், பயோ மெட்ரிக் முறை வேலை செய்யாததாலும் பொங்கல் தொகுப்பினை பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து பேசிய கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “இந்த பிரச்சனை காரணமாக ஜனவரி 13 வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும். இதனால், பரிசு தொகுப்பை பெறாதவர்கள் இன்று சென்று பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.