தமிழகத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக காண்பித்து மோசடி செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது அதன் பிறகு சமீபத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இராமியம்பட்டி பள்ளியில் கே பாலாஜி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்த நிலையில் அவர் சரிவர பள்ளிக்கு வராததோடு தனக்கு பதிலாக வேறொருவரை பள்ளிக்கு அனுப்பி மோசடி செய்தது தெரியவந்த நிலையில் அவரை தொடக்க கல்வித்துறை சஸ்பெண்ட் செய்தது. தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் மொத்தம் 31,366 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இதில் ஆசிரியர்கள் தங்களுக்கு பதிலாக வேறொருவரை பள்ளிக்கு அனுப்பி மோசடி செய்வது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக பாஜக இதனை கடுமையாக கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில், கண்கட்டி வித்தை காட்டிய கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர்ஸ். கண்டுபிடிக்க முடியாத தமிழக காவல்துறை என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டனர். மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10000 போலி ஆசிரியர்கள் பணி புரிவது தெரியவந்த நிலையில் இது பற்றி வெளியே சொல்லாமல் இருக்க தொடக்க கல்வி அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதோ அந்த அறிக்கை,
View this post on Instagram