தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. விடுமுறை முடிவடைந்த நாளை மறுநாள் அதாவது திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மகிழ் முற்றம் குழுக்கள் உருவாக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதாவது மாணவர்களிடையே தலைமை பண்பை உருவாக்கும் விதத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐவகை திணைகள் பெயரில் இந்த குழுக்களை உருவாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் அதிக அளவில் விடுமுறை எடுப்பதை குறைத்தல் மற்றும் கல்வியை ஊக்குவிக்க ஆசிரியர் மற்றும் மாணவர் உறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.