தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரிய நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வருகையின் போது மின்தடை ஏற்பட்ட நிலையில் மின்வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக மின்தடை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.