நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கட்டாய உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சுப்பிரமணியன் என்ற தொடங்கி வைத்தார். இது குறித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், 104 மற்றும் 144516 ஆகிய எண்களில் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. நீட் தேர்வு எழுதிய உடன் 54,374 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.