தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் திருக்குறள் போட்டி நடைபெற இருக்கிறது.‌

இதில் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, குறும்பட போட்டி, கவிதை போட்டி, செல்ஃபி போட்டி போன்றவைகள் இடம் பெற்றுள்ளது. இவற்றை வீடியோ அல்லது ஆடியோ வடிவில் அல்லது pdf வடிவில் வருகிற 18-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் இதனை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.