நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் சாலிகிராமத்தில் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய அவர், இந்தியாவில் 150 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என பாஜக டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது.

அதில் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பாஜக வெற்றி பெற வேண்டும் என நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். சூசகமாக தொகுதி பங்கீடு குறித்து அவர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகின்றன. மேலும் திமுக கூட்டணியில் தான் சலசலப்பு உள்ளது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வலுவாக தான் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.