திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரை அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் சென்ற 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இப்பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்த பிறகு மின்சார ரயில் சேவையாக மாற்றப்பட்டு இன்று முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் 10 நிமிடம் பயணம் நேரம் அதிகரிக்கபட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. திருச்செந்தூர் to சென்னை மின்சார என்ஜின்கள் வாயிலாக இயக்கப்படும் முறையானது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

அதிலும் குறிப்பாக இரவு 7.10 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு பதில் இன்று இரவு 8.10 மணிக்கு மின்சார எஞ்சின் வாயிலாக புறப்பட்டு ஒரு மணி நேரம் 10 நிமிடம் பயண நேரம் வேகப்படுத்தபட்டு சரியாக 8.10 மணியளவில் திருச்செந்தூரிலிருந்து 18 பெட்டிகள் அடங்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. திருச்செந்தூர் to சென்னை இடையில் முதல் முறையாக மின்சார என்ஜின்கள் வாயிலாக இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேர மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.