பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாது என்று ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையை தமிழில் தொடங்கி ஆங்கிலத்தில் உரையாற்றினார். ஆளுநர் ரவி ஆற்றிய உரையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது என அரசு கருதுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஆளுநர் ஆர் என் ரவி உரையை தொடங்கும்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தது.