ரேஷன் கார்டு மூலம் மக்கள் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும் அரசு வழங்கும் உதவித்தொகை, பேரிடர் கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. தகுதி வாய்ந்தவர்கள் ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக 1.50 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.