தமிழகத்தில் காவல்துறையினர் ரவுடிகளை என்கவுண்டரில் சமீப காலமாக ‌ பிடிக்கிறார்கள். ரவுடிகள் மீது என்கவுண்டர் பாயும் நிலையில் சில ரவுடிகளை காவல்துறையினர் தப்பி ஓட முயலும்போது சுட்டுப் பிடிக்கின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் பிரபல ரவுடியை காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ளனர். அதாவது சென்னை வியாசர்பாடி சேர்ந்த A category ரவுடி அறிவழகன். இவர் பெரம்பூர் பனந்தோப்பு காலனி அருகே பதுங்கி இருந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு அவரை போலீசார் பிடிக்க சென்றபோது ‌ போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

இதனால்காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். மேலும் அறிவழகன் மீது 3 கொலை வழக்குகள் இருக்கும் நிலையில் அவர் கடந்த 8 வருடங்களாக ஆந்திராவில் தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.