தமிழகத்தில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில் தமிழர் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வருடம் தோறும் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். அதன்படி சர்க்கரை, கரும்பு, அரிசி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவதோடு ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும். அந்த வகையில் அடுத்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரொக்க பரிசு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கடந்த வருடம் முதல் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தகுதி உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் நிலையில் இன்னும் பல பெண்கள் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில் ரேஷன் கடைகள் மூலமாக 1000 ரூபாய் பணம் வழங்கப்படும் அல்லது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதோடு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் அப்படி பார்த்தால் பொங்கல் அன்று டபுள் ஜாக்பாட் ஆக 2000 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.