முன்னாள் MLA பழ.கருப்பையா தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிப்,.5 ஆம் தேதி கட்சியின் கொடி கொள்கை ஆகிய விவரங்களை வெளியிட்டு மாநாடு நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
அதோடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் ஆதாரங்களை அவர் கலைத்து விடுவதாகவும், அதற்கு அரசு துணை போவதாகவும் கருப்பையா குற்றம்சாட்டி இருக்கிறார். தி.மு.க கூட்டணி கட்சிகள் கொள்கை கோட்பாடுகளை மறந்து அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டாமல் திமுக-வுக்கு அடிபணிந்து உள்ளதாக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை அவர் விமர்சித்து உள்ளார்.