தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம். இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்த நிலையில் தற்போது சென்னையிலும் பிப்ரவரி 11-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதன்படி அன்றைய தினம் பார்கள், கிளப்புகள், ஹோட்டல் பார்கள் மற்றும் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும். மேலும் தடையை மீறி மதுபான கடைகளை திறப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.