தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.

ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 6 -12ம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால், இன்றுக்குள் அனைத்து பள்ளி வளாகத்திலும் தூய்மை பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி திறப்பையொட்டி, விடுமுறைக்கு சோந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக, இன்று சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.