தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 24-ஆம் தேதி காற்றழுத்தமாக தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதாவது மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மற்றும் மே 21, 22, 23 ஆகிய தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.