தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. எங்கு தெரியுமா?….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்கள் அரசு தனியார் துறையுடன் இணைந்து நடத்தி வருகிறது. அவ்வகையில் மதுரை மாவட்டத்தில் நாளை அதாவது நவம்பர் 25ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த முகாம் கோ புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் எனவும் பிரபல தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமிற்கு வருபவர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுயவிவர குறிப்பு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் எடுத்து வர வேண்டும். இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். மேலும் இதில் விருப்பமுள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply