தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தற்போது மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை என அனைத்து அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும் என்றும் தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் மாவட்ட அதிகாரிகள் குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்ட அடக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதே சமயம் பட்டியலின மக்கள் புகார் அளிக்க பிரத்தியேக whatsapp எண் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்த முதல்வர் சமூக ஊடகங்களில் பொய் தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.