தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய அதிக அளவில் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஜூன் 25ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதன்படி நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் தமிழகத்தில் ஏனைய மாவட்டங்களில் கன மழை வெளுக்கும்.