தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் பள்ளிகளில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தனியார் பள்ளிகளில் கட்டண கொள்கை நடப்பதாக புகார்கள் வருவதை ஒட்டி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அரசு அறிவித்த தேதியில் தான் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.