தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் கைபேசி வங்கி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் வரை காஞ்சிபுரம் உள்ளிட்ட 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கைப்பேசி வங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது தமிழக முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 வங்கிகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளனர். இது படிப்படியாக விரிவு படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள் ஆகிய அனைத்திலும் விரிவு படுத்தப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.