தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் விதமாக பிப்ரவரி 25ஆம் தேதி அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் என்னென்ன உயிர்க்க கல்வி வகுப்புகள் உள்ளன என்பது குறித்தும் உயர்கல்விக்கு வழிகாட்டுவது தொடர்பாகவும் என் எஸ் எஸ் அலுவலர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இதனை தொடர்ந்து இந்த பயிற்சியில் பங்கு பெறும் ஒவ்வொரு ns அலுவலகம் தங்கள் கல்லூரியில் பயிலும் 30 என் எஸ் எஸ் மாணவர்களை இதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு வழி காட்டுவதற்காக நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் பத்து மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதன்படி பிப்ரவரி 25ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.