கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்ததால் கடந்த வருடம் மார்ச் 30ம் தேதி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடத்திற்கு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்துத்தேர்வு கடந்த ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. குரூப் 4 தேர்வு மூலமாக 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் குறித்து பரவும் ஆதாரமில்லாத தகவல்களை பொருட்படுத்த வேண்டாம் என்றும் டி.என்.பி.எஸ்.சி கூறியுள்ளது. இதுவரை இல்லாத அளவு இந்த தேர்வை 8.36 லட்சம் பேர் எழுதியுள்ளனர். குரூப் 4 விடைத்தாள்களின் இருபாகங்கள் தனித்தனியாக ஸ்கேன் செய்யப்படுவதால் 36 லட்சத்திற்கும் அதிகமான விடைத்தாள்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.