தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே இரவிலும், அதிகாலையிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதே சமயத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அடுத்த 8 நாட்களுக்கு (ஜனவரி 15ம் தேதி வரை) இரவில் குளிர் நீடிகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி நடுப்பகுதியில் இமயமலையில் இருந்து குளிர்ந்த காற்று தமிழகம் அவரை நகர தொடங்கும் என்றும், இதன் காரணமாக இரவு வெப்ப நிலை குறையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.