
துபாய் நாடு ஒரு செல்வ செழிப்பு மிக்க நாடு. அதோடு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் ஒரு நாடாகவும் இருக்கிறது. இங்கு பல உயரமான மற்றும் அற்புதமான கட்டிடங்கள் இருக்கிறது. உதாரணமாக உலகின் உயரமான புர்ஜ் கலீபா துபாய் நாட்டில் உள்ளது. இந்நிலையில் தற்போது துபாய் நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் இரு ஆண்கள் சாலை ஓரமாக அமர்ந்து ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சாலை ஓரமாக வித்தியாசமாக 2 கார்கள் சாகசம் செய்தபடியே சென்ற நிலையில் அதிலிருந்து இருவர் டீகோப்பைகளை உயர்த்தி காட்டியபடி செல்கிறார்கள். மேலும் இந்த வினோத சாகசம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram