இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வரும் நிலையில் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணியை பிசிசிஐ மற்றும் தேர்வு குழு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தவறவிடும் பட்சத்தில் அவருக்கு பதிலாக கேப்டன்ஷிப் பொறுப்புக்கு பலர் இருக்கிறார்கள்.

குறிப்பாக ஹர்திக் பாண்டியா, பும்ரா, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் என‌ வரிசையாக வீரர்கள் இருக்கும் நிலையில் முன்னால் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேப்டனாகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் இருக்கிறது என்பது குறித்து ஒரு தகவலை பரிந்துள்ளார். அதாவது சுப்பன் கில்லுக்கு தான் கேப்டன் ஆகும் வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதாவது 23 வயதாகும் கில் கேப்டனாக நன்றாக செயல்படுவதோடு பேட்டிங்கிலும் அதிரடியான ஆட்டத்தை விளையாடி வருகிறார். இதனால் இவருக்கு தான் கேப்டன் ஆகும் வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இதே போன்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சஞ்சு சாம்சனை கேப்டன் ஆக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.