பாகிஸ்தான் ரயில்வே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தळப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சொகுசு ரயிலின் விளம்பர வீடியோ ஒன்று,  போலியான ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது  வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

பாகிஸ்தான் ரயில்வே நிர்வாகம், “பாகிஸ்தான் ரயில்வேயின் புதிய பிரீமியம் கோச்சுகள் விரைவில் வருகின்றன!” என்ற ஆசையூட்டும் கேப்ஷனுடன் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு வீடியோவை அதிரடியாகப் பகிர்ந்திருந்தது. அந்த வீடியோவில் ரயிலின் உட்புறக் கட்டமைப்பு, சொகுசான இருக்கைகள், நவீன விளக்குகள் மற்றும் அதிநவீன வசதிகள் எனப் பார்ப்போரைக் கண்மூட வைக்கும் பிரம்மாண்ட காட்சிகள்  காட்டப்பட்டிருந்தன.

ஆனால், வீடியோ வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே உஷாரான நெட்டிசன்கள், இது நிஜமான ரயிலே அல்ல, முழுக்க முழுக்க ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்பதை மிக  ஆதாரத்துடன் கண்டுபிடித்துப் பாகிஸ்தான் அரசைத் தாறுமாறாகத் கேலி செய்ய  ஆரம்பித்துவிட்டனர்.

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் வேளையில், தற்போதும் வெறும் 60 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே ஓடும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்காமல், இப்படி ஏஐ மூலம் சொகுசு ரயில் கனவு காணும் அரசைப் பார்த்துப் பொதுமக்கள் செம கடுப்பாகியுள்ளனர்.