விடுமுறை நாட்கள் வந்தாலே பேருந்து மற்றும் ரயில்களில்  கூட்டம் அலைமோதும். அதனால் முன்கூட்டியே தங்கள் செல்லும் பகுதிகளுக்கான ரயில்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்கிறார்கள். அவ்வாறு செய்பவர்களில் ஒரு சில சூழ்நிலை காரணமாக டிக்கெட்டை ரத்து செய்ய  நேரிடுகிறது. அப்படி ரத்து செய்யப்படும் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றிக் கொடுக்கும் வசதியை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. எப்படி வேண்டுமானாலும்  டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளலாம்.ஆனால் டிக்கெட் ரத்து செய்யும் நிலை வந்தால்  சுமார் 24 மணி நேரத்திற்கு முன்பாகவே டிக்கெட் கண்காணிப்பாளரிடம் கடிதம் ஒன்றை வழங்க வேண்டும்.

அந்த கடிதத்தின் மூலம் சகோதர, சகோதரி, மகன், தாய், மகள், கணவன், மனைவி போன்றவர்களின் பெயரை மாற்றிக் கொள்ளலாம். அதேபோல கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுடைய மாணவர்கள் தங்களுடைய பயணத்தை ரத்து செய்யும்போது டிக்கெட்டை சுமார் 48 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட் கண்காணிப்பாளரிடம் கடிதம் வழங்க வேண்டும். சக மாணவ மாணவிகளுக்கு அல்லது கல்வி நிறுவனத்திற்கு தொடர்புடையவர்களுக்கு டிக்கெட் மாற்றிக் கொடுக்கலாம். இவ்வாறு தங்களுடைய பயணத்தை ரத்து செய்யும்போது அதை வேறு ஒருவருக்கு மாற்றுவது சுலபம்தான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.