தமிழ் சின்னத்திரையில்  நடிகராக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின் தற்போது வெள்ளி திரையில் ஹீரோவாக நடித்த வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாடா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணாதாஸ் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை அபர்ணாதாஸ் சோசியல் மீடியாவில் கவின் பற்றி ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் கவினை அபர்ணாதாஸ் காதலித்து வருகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் தனக்கு டாடா படத்தில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததே கவின்தான் என்றும் அபர்ணா தாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதன் காரணமாகத்தான் நடிகை அபர்ணாதாஸ் கவினை காதலிப்பதாக தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது.